18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு, ரூபாய் 1 இலட்சம் பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஜனவரி-24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசால் பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
மாநில விருது வழங்குவதற்கான தகுதிகள் :
1. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்டபடி (31 டிசம்பர்-ன் படி) தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை.
2. கீழ்க்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
➢ பெண் கல்வி
➢ பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
➢ பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல்.
➢ வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
➢ பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.
➢ ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி : https://awards.tn.gov.in/ மேலும் விண்ணப்பித்த கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க இறுதி நாள்: (15.11.2023) ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision