திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு பிரத்யேக ரயில்பெட்டி

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு பிரத்யேக ரயில்பெட்டி

தென்னக ரயில்வேயில் திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 90க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ரெயில் நிலையங்களை ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து அதற்கென ஒரு இன்ஜினுடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட ஒரு பெட்டி திருச்சி ஜங்சனுக்கு வரவழைக்கப்பட்டு அதன்பின் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது திருச்சி கோட்டத்திற்கு பிரத்யேகமான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வு செய்ய சிறப்பு உந்துதல் ஆய்வு வாகனம் (SPIC) என்று சொல்லப்படும் என்ஜினுடன் இணைக்கப்பட்ட ரயில் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உந்துதல் ஆய்வு ரயில் திருச்சிக்கு வந்து சேர்ந்தது.

இந்த ரயிலில் பயணம் செய்து கொண்டே அதிகாரிகள் ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, மேலும் வை-பை வசதி, பயோ கழிவறை 32 பேர் அமரக்கூடிய இருக்கைகள், 3 பக்கங்களும் மொத்தமான சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிக ளால் வடிவமைக்கப்பட்டுள் ளது. பெட்டிகள் முழுவதும் குளிருட்டப்பட்ட அறைகளாகவும் வடிவமைகப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வெளிப்பகுதியில் நான்கு திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த சிறப்பு உந்துதல் ஆய்வு வாகளத்தில் கோட்ட மேலாளர், உதவி கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கோட்டத்திற்கு உட்பட்ட சிறிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்வதற்காகவும் வருடாந்திர ஆய்வுகள், பயணிகளின் பாதுகாப்பு குறித் தும்,ரயில் தண்டவாளங்களின் நிலை, ரயில் நிலையங்களில் உள்ள தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற அம்சங்களை அவ்வபோது ஆய்வு நடத்த பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிறப்பு உந்துதல் வாகனத்தில் அமர்ந்துகொண்டே எந்த ரயில் நிலையங்களையும் தொடர்பு கொள்ளும் அளவிற்கு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்பெட்டி திருச்சி கோட்டத்திற்கு என்று தனியாக வழங்கப்பட்டதால், நினைத்த நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய புறப்படுவார்கள். இதனால் சிறிய ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய ரயில் நிலையங்களை கவனமுடன் கண்காணித்து, பாதுகாப்பதற்கான முயற்சிகளும் நடக்கும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn