சர்வதேச மாற்றுத்திறனாளி வீரரின் பதக்க வேட்டைக்கு தடை

சர்வதேச மாற்றுத்திறனாளி வீரரின் பதக்க வேட்டைக்கு தடை

சர்வதேச மாற்றுத்திறனாளி வீரரின் பதக்க வேட்டைக்கு தடை ஏற்படுத்தும் சக்கர நாற்காலி ரமேஷ்  சர்வதேச மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் மின்னத்தம்பட்டி கிராமம் சேர்ந்த ரமேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சாலை விபத்தில் தனது இடது காலை முழுமையாக இழந்து விட்டார்.

தாய் தந்தை இருவருமே விவசாய கூலிகள் தற்போது இளங்கலை அறிவியல் படிப்பை முடித்துள்ளார் ஒற்றை காலை தானே இழந்தோம்  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இழக்கவில்லை என்று லட்சியத்தை  நோக்கி இவருடைய பயணம் தொடர ஆரம்பித்தது. 2014 ஆண்டு முதல்  சக்கர நாற்காலியில் கூடைப்பந்து விளையாட்டு விளையாடி வருவதாக ரமேஷ் பேசிய போது மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளேன்.

 கடந்த 6வருடங்களாக தமிழ்நாடு அணி கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி சென்றுள்ளேன் 2017 ஆண்டு ஜூலை மாதம் இந்தோனேசியா பாலி-யில் நடைப்பெற்ற சர்வதேச விளையாட்டு போட்டி இந்தியா அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றேன்.. 
2018ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துக்கொண்டு இந்திய அணி 7-ம் பிடித்தது. 

2018 நவம்பரில் லெபனான் நாட்டில் ICRC சார்பாக  நடைபெற்ற  போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 2019 நவம்பர் தாய்லாந்து பட்டாயா நகரில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் தகுதி சுற்றில் இந்திய அணிக்காக கலந்துக்கொண்டேன். 


தற்போது 2021 செப்டம்பர் எகிப்தின் கிலோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் வீல்சேர் கைப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு உலக அளவில் நான் அதிக கோல்கள் அடித்து 4-ம் இடம் பிடித்தேன். 


2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி  இந்தியாவில் நடைபெற்றது. அதில் இந்திய அணி சார்பில் நான் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளேன் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் சர்க்கரை நாற்காலி கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் கலந்து கொண்டு நான்காது இடம் பிடித்தோம்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -20 ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில்  நடைபெற்ற 21 வது தேசிய அளவிலான பாரா தடைகளை போட்டியில் 1500 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன் இப்படி தொடர்ந்து வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்த இவர்  தனி நபர் விளையாட்டுப் போட்டியில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் மற்றும் கடுமையான பயிற்சியும் எடுத்து வருகிறேன் என்றார்.


தற்போது கடுமையான பயிற்சி மேற்கொண்டு வரும் இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு அதில் வரும் குறைந்த வருமானத்தை வைத்து வார இறுதி நாட்கள் சென்னை சென்று அங்கு பயிற்சியாளரிடம் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். தான் தற்பொழுது வைத்திருக்கும் சக்கர நாற்காலி என்பது ஆயிரம் ரூபாய் அதை வைத்து சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற முடியாத நிலையில் உள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

 இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் நான் பங்கு கொள்ள சர்வதேச தரத்திலான சர்க்கர நாற்காலி தேவைப்படுகிறது.இதனை அமெரிக்காவிலிருந்து  வாங்குவதற்கு எனக்கு சுமார் 7 லட்சம் தேவைப்படுகிறது.இந்த நிதி உதவி எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக 2024 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்க்கு தங்க பதகத்தை வெல்வேன் அதற்க்கு உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்