பள்ளிகளுக்கு இடையேயான கையெழுத்துப் போட்டி பரிசளிப்பு விழா -அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
Mansa calligraphy நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு இடையேயான "Handwriting champ-2022" கையெழுத்துப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைப்பெற்றது. கையெழுத்து அழகாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் (ஜனவரி 23) உலக கையெழுத்து தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்பட தாமதமானதால் இந்தப் போட்டியானது மாணவர்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக தற்போது நடைபெற்றது.
இதில் ஒட்டுமொத்தமாக பதினோரு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு நேற்றையதினம் திருச்சி தேசியக் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி குறித்தும் Mansa calligraphy நிறுவனத்தின் நிறுவனர் சரிதா கூறுகையில்... கையெழுத்து என்பது மிக முக்கியமான ஒன்று மாணவர்கள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும், அது அவர்கள் எழுதும் விதத்திலேயே இருக்கின்றது அவர்களுடைய கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்படியான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 5 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மூன்று படிநிலைகளில் நடைபெற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 360 மாணவர்கள் கலந்துகொண்டதில் 60 மாணவர்கள் பரிசு பெற்றனர் என்றார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO