சர்வதேச போட்டிக்கு லால்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு

சர்வதேச போட்டிக்கு லால்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு

இந்திய கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் பெடரேசன் கோப்பைக்கான பல்வேறு  விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம்  கோவாவில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் லால்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நூர்ஜகான் மகன் சாகுல்ஹமீது (21) மற்றும் லால்குடி பரமசிவபுரம் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது இஸ்மாயில் (25) ஆகியோர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் சாகுல்ஹமீது நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 6.5 மீட்டர்  தூரம் தாண்டி முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு தங்க பதக்கத்தை வென்றார். இதே போல் முகமது இஸ்மாயில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர்.

இதில் வெற்றி பெற்ற சாகுல் ஹமீது மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோர் இம்மாத கடைசியில்  நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க  இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr