திருச்சியில் 2 நாட்கள் தமிழ்நாடு முதலமைச்சர்

திருச்சியில் 2 நாட்கள் தமிழ்நாடு முதலமைச்சர்

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இந்த தேர்தலை கடும் சவால்களுடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றது.

இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திமுகவில் அதன் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். அதன் முன்னோட்டமாக திருச்சிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் 2 நாள் தங்கியிருந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

இதற்காக இன்று (26.07.2023) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து கார்கில் போரின் 24வது ஆண்டு வெற்றிதினவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பதிக்குமார். மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

இதே போன்று முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சங்கத்தினர் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision