தமிழக முதல்வர் ஸ்டாலின் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மரியாதை
24வது கார்கில் வெற்றிதினத்தையொட்டி திருச்சியில் கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் நினைவிடத்தில் முன்னாள் ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.
1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது ஜம்மு – காஷ்மீர் திராஸ் பகுதியில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 24வது ஆண்டு வெற்றிதினவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இவ்வெற்றிவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் கார்கில் போரில் வெற்றிக்கு வித்திட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கார்கில் போரில் எதிரிகள் முகாமிற்குள் நுழைந்து 4பேரை சுட்டுவீழ்த்தி ஏவுகணையால் எதிரிகள் முகாமை அழித்து வீரமரணமடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் இன்று மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில் திருச்சி முன்னாள் ராணுவ வீரர்கள் நல ச சங்கத்தின் சார்பில், கேப்டன் ஞானசேகரன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இது போன்று பலரும் பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போரில் வீர மரணமடைந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், பாராளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்ட திமுகவினர் முதல்வருடன் மரியாதை செய்தனர்.