ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 59 ரயில்கள் ரத்து

ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 59 ரயில்கள் ரத்து

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 2 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட 8வது நடைமேடைக்கான தண்டவாளத்தை நவீன முறையில் இணைக்கும் இன்டர் லாக்கிங் பணி நடந்து வருகிறது.

இப்பணியினால் வரும் ஒன்றாம் தேதி வரை (01.08.2023) திருச்சி தஞ்சை மார்க்கத்தில் இயங்கும் 15 ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை மற்றும் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 46 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தவிர 17 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ள குறித்த விபரங்கள் www.kooap.com/profile/drm.tpj என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision