தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவில் திருச்சியை சேர்ந்தவர் தேர்வு

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவில் திருச்சியை சேர்ந்தவர் தேர்வு

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு என்பது அரசு சாரா அமைப்பாகும் 1997 ஆம் ஆண்டு டாக்டர் டி ஆர் ராஜமோகன் என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களுக்கு லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவது சற்றே சவால் ஆனது. ஆனால் சிறு துளியும் பெரும் பயனை உண்டாக்கும் என்பது போல் இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் லஞ்சம் இல்லா சமூகம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக முயற்சித்து வருகின்றது.

இந்த அமைப்பானது இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, கத்தார், துபாய், மலேசியா தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் ஊழல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதனை சரி செய்வதற்கு நாம் உள்ளூரில் இருந்து தொடங்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலம் மாவட்டம் தாலுக்கா என அனைத்து பகுதிகளிலும் இந்த அமைப்பானது செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 10,000 மேற்பட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் தென் இந்திய தலைவராக தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர். எம் சக்தி பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அமைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக மிக சிறப்பாக சேவையாற்றி வருகிறார். நம்மில் இருந்து எந்த ஒரு மாற்றமும் தொடங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தன் வாழ்விலும் அதனை கடைபிடித்து வருகிறார்.

2014ஆம் ஆண்டு திருவெறும்பூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், 2016 இளைஞரணி செயலாளராகவும், 2017 மாவட்ட செயலாளராகவும், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிழக்கு செயலாளர் மற்றும் பொதுச் செயலாளராக பணியை தொடர்ந்து செய்து வந்துள்ளார். தற்போது 2023 ஆம் ஆண்டு அமைப்பின் தென்னிந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா நான்கு மாநிலங்களில் உள்ளடக்கிய தலைவராக தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி.

2040 இலக்காக கொண்டு பல்வேறு முறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், கருத்துக்கணிப்பு போன்ற பல்வேறு முறையில் சமுதாயத்திற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறோம். 

இதுவரை 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் லஞ்ச ஒழிப்பு குறித்த புரிதலோடு இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாய் இருந்ததே பெரும்மகிழ்ச்சி இனிவரும் காலங்களிலும் பல நூறு இளைஞர்கள் மூலம் சமுகத்தில் பெறும் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து பணி செய்வேன் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision