தமிழ்நாடு அரசு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தமிழ்நாடு அரசு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத்துறையால், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு 17 வகைப்பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

1) தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)

2) சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)

3) சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner)

4) சிறந்த விமான பங்குதாரர் (Best Airline Partner)

5) சிறந்த தங்குமிடம் (Best Accommodation)

6) சிறந்த உணவகம் (Best Restaurant)

7) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamilnadu Tourism Development Corporation Star Performer)

8) சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award - Best District)

9) சுத்தமான சுற்றுலாத் தலம் (Cleanest Tourism Destination)

10) பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)

11) சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)

12) சிறந்த "MICE" சுற்றுலா அமைப்பு (Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer)

13) சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவர் (Best Social Media Influencer)

14) சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)

15) தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் (Best Advertisement on Tamilnadu) 

16 ) சுற்றுலாவினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல் (Best Tourism Promotion Publicity Material)

17) சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)

இந்த வருடம் 2023-24ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாங்கள் www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து (20.08.2024)-க்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சுற்றுலா தொழில்முனைவோர்களில் 2023-2024-க்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகின்ற (27.09.2024) அன்று சென்னையில் நடைபெறவுள்ள உலக சுற்றுலா தினவிழாவில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும். அதற்கான இடம், நேரம் மற்றும் ஏனைய விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பின்னர் தெரியப்படுத்தப்படும்.

எனவே, திருச்சி மாவட்ட சுற்றுலாத் தொழில்முனைவோர் அனைவரும் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை விரைந்து இணையத்தளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision