நள்ளிரவில் வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

நள்ளிரவில் வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 24.04.22-ம்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டிரைனேஷ் தெரு, SS கார்டனில் நள்ளிரவு 02.00 மணிக்கு வாட்சுமேனின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும், மண்வெட்டியால் தாக்கியும், வாட்சுமேன் மனைவி அணிந்திருந்த 4 கிராம் எடையுள்ள தோடுகள், பணம் ரூ.10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரிகள் மகேஸ்வரன் , அஜித்குமார்  ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மகேஸ்வரன் மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 6 வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், எதிரி அஜித்குமார் மீது முன்விரோதத்தால் ஆட்டோவை அடித்து நெறுக்கியும், அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கு உட்பட 10 வழக்குகளும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் மகேஸ்வரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO