முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை 100 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவு
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (79), இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த (1989-1993) காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சத்து இருபத்து ஐந்தாயிரத்து ஐநூற்று முப்பத்து இரண்டு மட்டும்) 98% ஆகும்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த (17.08.2001) அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதியால் வழக்கு தொடுக்கப்பட்டு புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில், விசாரணை முடிவுற்று இன்று (25.04.2024) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்களால், குற்றவாளி(1) ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி குற்றவாளி(2)வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
மேற்படி சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேலாகும் என தெரியவருகிது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision