போராட்டம் நடத்த திட்டமிட்டதால் திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

போராட்டம் நடத்த திட்டமிட்டதால் திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சி மங்கள் & மங்கள், ஆனந்தா ஸ்டோர்ஸ், கணேசன் ஸ்டோர்ஸ் ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றைமால் மற்றும் இரட்டை மால் சந்தை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலோடு பொதுமக்கள் வழியை பயன்படுத்துவதற்கும் பெரும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் அப்பகுதியை பயன்படுத்துவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடகோரி 22.08.2022 ஆர்ப்பாட்டம் நடத்துவதாக CPI. AITUC கிழக்கு பகுதி குழுசார்பில் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கோட்டை காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னரை ஆக்கிர்மிப்பை அகற்றின்ர்.

அப்பகுதியானது கோட்டை காவல்துறையினர் முழுமையாக அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC தரைக்கடை சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட அவ்விடத்தை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த ‌ தொடங்கியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO