திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழா கடையடைப்பு போக்குவரத்து மாற்றம் பயணிகள் அவதி
தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பெரியார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அனுப்பினர் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மனுதர்ம புத்தகத்தை எரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் மனுதர்ம புத்தகத்தை எரித்தால் நாங்கள் பெரியாரின் புத்தகத்தை எரிப்போம் என பாஜகவினர் தெரிவித்திருந்தனர். இதனால் திருச்சி மாநகரில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அந்தப் பகுதியில் வரும் பேருந்து மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டு சாலை நடுவே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் பெரியார் சிலை இருப்பதால் நகர பேருந்துகள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை .பேருந்து நிலையத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நகர பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO