சிறுவனை கடத்தி பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.9,000/- அபராதம்
கடந்த (01.10.2019)-ந் தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறுவனை கடத்தி சென்று வீட்டினுள் பூட்டி வைத்து ஒரு நபர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் சிறுவனை ஜெயிலில் அடைத்து விடுவேன் என மிரட்டியதாக பெறப்பட்ட புகாரில், திருச்சி கொட்டபட்டுவை சேர்ந்த பிரதீபன் (33), த.பெ.ரெத்தினாயகம் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரி பிரதீபனை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி எதிரி பிரதீபன் மீது (30.11.2019)-ந் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று (21.08.2023)-ம் தேதி, மேற்படி எதிரி பிரதீபனுக்கு ச/பி 5(1),5(m) r/w 6(1) of POCSO Act 2012 -ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.5,000/-ம் அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ச/பி 342 IPC -ன்படி ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.500/-ம், அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், ச/பி 363 IPC -ன்படி ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும்,
அபராதம் ரூ.3,000/-ம், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ச/பி 506(i) IPC -ன்படி ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.500/-ம், அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.2,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, வெகுவாக பாரட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision