பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனை கோட்டத்தில் மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கையயை எதிர்த்து பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றுவதால் 76000 பாதுகாப்புத் துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு,2021- 30 -ஜுனில் இயற்றிய EDSO()2021 பாதுகாப்பு தொழிற்சாலை ஊழியர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக வேலைநிறுத்த உரிமையைப் பறிப்பு
ரயில்வே உற்பத்தி பிரிவுகள் பணிமனை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்தது.
ரயில்வே நிலங்களை 15 ரயில்வே விளையாட்டு மைதானங்களைRLDP மூலம் தனியாருக்கு விற்பது.மேலும் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் L.பவுல் ரெக்ஸ், கோட்ட தலைவர்,தலைமை வகித்தார், மேலும் S.இரகுபதி, துணை பொதுச்செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.L.சேசுராஜா, V.சுந்தர், செயலாளர் S.பாலமுருகன், கோட்ட துணை தலைவர், V.சந்திரசேகர், உதவி கோட்ட செயலாளர், K.ஞானசேகர், கோட்ட உதவி செயலாளர், S.பன்னீர் செல்வம் செயலாளர் டீசல் கிளை, வடிவேல் கேரேஜ் கிளை செயலாளர், V.வெங்கட் நாராயணன், INTUC மாவட்ட தலைவர் மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனையை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மத்திய அரசின் தொழிலாளர் நலவிரோத தனியார்மய கருப்பு சட்டங்களுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களுடைய ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவித்தனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து இருப்பதோடு மட்டுமின்றி ஏழுவகையான கோரிக்கைகளையும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS