திருச்சியில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (10.08.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. லால்குடியில் 5 மி.மீட்டர், தேவமங்கலம் 20.2 மி.மீட்டர், சமயபுரம் 2 மி.மீட்டர், கோவில்பட்டி 30 மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 10.6 மி.மீட்டர், பொன்னையார் டேம் 25 மி.மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி5.4 மி.மீட்டர், புலிவலம் 2 மி.மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 3மி.மீட்டர், துவாக்குடி ஐஎம்டிஐ 38 மி.மீட்டர், கொப்பம்பட்டி 3 மி.மீட்டர், தேன்பரநாடு 7 மி.மீட்டர், துறையூர் 6 மி.மீட்டர், திருச்சி டவுன் 1.2 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 120.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 5.03ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision