மங்களம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தாவரங்களும் மூலிகைகளும் நிரம்பியுள்ள மலைப்பகுதியாகும். இம்மலைப் பகுதியில் கல்லாறு சின்னாறு மருதையாறு வெள்ளாறு முதலான நதிகளில் உள்ளடா தற்போது கோடை மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளது. பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்களம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து செல்வதால் தற்காலிகமாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் .
பச்சைமலை பெரிய மங்களத்திலிருந்து மலைவாழ் மக்கள் பயன்பாட்டிலுள்ள ஒற்றையடி பாதை வழியில் உள்ள எட்டெருமைப்பாலி அருவியில் சுமார் 100 மீட்டர் உயரத்திலிருந்து நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது பார்ப்பவர்களை பரவசமாக்குகிறது. இந்த அருவிக்கு அருகே விஷ ஜந்துகள், பாம்புகள் நடமாட்டம் அதிகம் என்பதாலும், அருவிக்கு செல்லும் பாதை கரடுமுரடாகவும், இறங்கும் வழி ஆபத்தாக உள்ளதாலும் இந்த அருவிக்கு செல்வதற்கும் நீராடுவதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision