உலக பல்லுயிர் பெருக தினம் - வனத்துறை சார்பாக ஓவியப்போட்டி

உலக பல்லுயிர் பெருக தினம் - வனத்துறை சார்பாக ஓவியப்போட்டி

திருச்சி வனத்துறையினர் உலக பல்லுயிர் பெருத்த தினத்தை (International day of Biological Diversity) முன்னிட்டு ஹோலி கிராஸ் கல்லூரியில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த ஓவிய போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 பள்ளிகளை சேர்ந்த மாணவ / மாணவியர் கலந்து கொண்டனர்.

"Be part of the plan" என்ற கருப்பொருளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல்12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/ மாணவியர்களுக்கு திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் தற்போதய சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம், வன உயிரினங்களை பாதுகாத்தல் குறித்து பள்ளி மாணவ / மாணவியரிடையே விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், கல்லூரி துணை முதல்வர் ஜூடி, மாவட்ட கல்வி அலுவலரின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், திருச்சி வனச்சராக அலுவலர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்றார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision