திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை பக்தர்களின்றி படையல்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக் விநாயகர் சதுர்த்தியின் போது ஒவ்வொரு ஆண்டும் தலா 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்படும்.கொரோனா தொற்று காலகட்டமாக இருப்பதால் இந்த ஆண்டு தலா 30 கிலோ மட்டுமே கொழுக்கட்டை சுவாமிக்கு படையலிட்டதாக திருச்சி மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்தார்.
முன்னதாக 30 கிலோ கொழுக்கட்டையை மலைக்கோட்டை பணியாளர்கள் தோளில் சுமந்தவாறு உச்சி பிள்ளையாருக்கு கொண்டு சென்று படையலிட்டு பின்னர் மாணிக்க விநாயகருக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் பூஜை காரியங்கள் செய்பவர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின்றி விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn