குடிநீர் இணைப்பு கேட்டு தொழிலாளி குடும்பத்தினர் உண்ணாவிரதம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் நெடுங்கு ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). சமையல் தொழிலாளியான இவருக்கு மனைவி உஷா (35), மகள் துவாரகா (3) உள்ளனர். இவர் வீடு கட்டி சுமார் 8 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என்று ஊராட்சி தலைவர், ஊராட்சிசெயலாளர், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வந்த கோவிந்தராஜ் வீட்டின் ஆகியோர் குழந்தையுடன். பந்தல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல்
அறிந்த மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் கலைமதி மற்றும் ஊராட்சி செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு செய்துதரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision