ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான வாழை தீயில் கருகி நாசம்
கீழகல்கண்டார் கோட்டையில்ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான வாழை தீயில் கருகி நாசம் பொறியியல் பட்டதாரி இளம் விவசாயி கவலை :
திருச்சி மாவட்டம் உறையூர் மங்களம் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் வயது 39 பிஇ பட்டதாரியான இவர் தனது பூர்விக இடமான திருவெறும்பூர் அருகே உள்ள கீழகல்கண்டார் கோட்டையில் வாழை விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சித்திரையில் ஏல அரிசி ரக வாழையை முன்னரே ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு பராமரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவருடைய வாழை தோப்புக்கு அருகே உள்ள வயலில் மர்ம நபர்கள் முள் சருகுகளை தீயிட்டு எரித்த போது, அந்த தீயானது வாழை தோப்புக்குள் பரவியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீயானது வாழைத்தோப்பு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
இது குறித்து தகவல் அறிந்து வாழை தோப்பிற்கு வந்த விவசாயி சிவகுமார் ஈனும் பருவத்தில் உள்ள வாழை மரங்கள் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ 3லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள், சவுக்குகள் தீயில் எரிந்து சேதமாயின.
இது குறித்து வாழை விவசாயி கூறுகையில், ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களை மீறி விவசாயம் செய்து வரும் நிலையில், மர்மநபர்கள் முள் சருகுகளை கொளுத்தியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சவுக்குகள் எரிந்து சேதமடைந்துள்ளது. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision