கடை வாடகையை ரத்து செய்ய வேண்டும் - கள்ளிக்குடி மார்கெட் வியாபாரிகள் மனு
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காய்கறி கழிவுகளால் விளையும் சுகாதாரச் சீர்கேடு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் 19 வரிசை கட்டிடங்களில் 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017, செப்.5-ம் தேதி முன்னாள் முதல்வர் பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இதனிடையே, சில வணிகர்களைக் கொண்டு விற்பனையைத் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அவர்களும் காந்தி மார்க்கெட் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டனர்.இதனால் 830 கடைகளும் காலியாகவே இருந்து வந்தன. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 623 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து வெகு தொலைவில் கள்ளிகுடி மார்க்கெட் இருப்பதால் பொதுமக்கள் வருகை இல்லாததால் வியாபாரம் இல்லாமல் கடை ஒதுக்கீடு பெற்றவர்கள் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய வணிக வளாகம் கள்ளிக்குடி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
இந்த மனுவில்.. மார்க்கெட் செயல்படாமல் உள்ள நிலையில் வாடகை நிலுவைத் தொகை செலுத்த கூறி கண்காணிப்பாளர் கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த ஆண்டுக்கான 2020 2021 ஒப்பந்த பத்திரம் கொடுக்கப்பட வேண்டும். நடப்பாண்டு கூறிய ஒப்பந்த பத்திரம் புதுப்பித்து தரவேண்டும். மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் வரை பராமரிப்பு செலவுக்கான தொகையாக 250 ரூபாய் மட்டுமே குறைந்தபட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும்.
பழுதடைந்த மின் கோபுரம் விளக்குகள் மற்றும் பொது மின் விளக்குகளை சரி செய்து தரவேண்டும். கழிவறை மற்றும் மார்க்கெட் பொது இடங்களை சரியாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கண்காணிப்பாளரின் அத்துமீறல் காரணமாக பல கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பாட்டில் உள்ளதை துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தை ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn