அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு திமுகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு திமுகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என். நேருவின் மகன் கே.என்.அருண் நேரு பிறந்தநாள் இன்று டிசம்பர் 12ல் கொண்டாடப்பட்டது. 

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் அருண் நேரு பிறந்தநாள் விழாவில் மேளதாளத்துடன், வானவேடிக்கை, அலங்கார வளைவுகள் என கோலாகலமாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அருண் நேருவை சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அருண் நேருவின் அரசியல் வருகை குறித்து திமுக தொண்டர்கள் மாநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் தனது பிறந்தநாளில் அருண் நேரு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn