மாமியாரை கொன்ற மனநலம் பாதித்த மருமகள்

மாமியாரை கொன்ற மனநலம் பாதித்த மருமகள்

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனியை சேர்ந்தவர் அக்பர் அலி இவரது மனைவி சம்சத் (55). அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஆயிஷா பேகம் ( 22 ) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதில் இந்நிலையில் ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயிஷா பேகம் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்து விடுவார் என்றும் ஏற்கனவே சம்சாத்தை தலையணையை கொண்டு முகத்தில் வைத்து அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாமியார் மருமகள் குடும்பத்தினர் அனைவரும் ஒடுகம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை மாமியார், மருமகள் இடையே தகராறு நிலவி வந்தது. அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சாத் பேகத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் இரு கத்திகளால் குத்தியுள்ளார். இதில் மாமியார் சம்சாத் பேகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் கொலையாளி மருமகள் மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை காயத்துடன் இருந்ததை கண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரை கண்ட மருமகன் ஆயிஷா மயங்கி விழுவே அவரை மீட்டு திருச்சிக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிந்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் சொத்து பிரச்சனையால் மருமகள் மாமியாரை கொலை செய்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டதால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision