ஒரு மாதத்தில் 15 லட்சம் அபராதம் திருச்சி மாநகராட்சி அதிரடி
கொரோனா தொற்று 2வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாநகரில் முககவசம், தனி மனித இடைவெளி பின்பற்றவர்கள், இரவு அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் அபராதம் பெறப்படுகிறது. கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை மாநகரில் 15 லட்சம் அபராதம் மாநகராட்சி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று மட்டும் 652 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் திருச்சியில் அரசு உத்தரவை மாவட்ட நிர்வாகம் கடுமையாக்கி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf