8 லட்சம் மதிப்புள்ள 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் கைது

8 லட்சம் மதிப்புள்ள 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் கைது

திருச்சி மாநகரத்தில், கடந்த 13.01.2022ந் தேதி கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் நடந்து சென்ற நபரிடம் சுமார் 82 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பந்தமாகவும், கடந்த 07.02.2022-ந் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சென்ற நபரிடம் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்த சம்பந்தமாகவும், கடந்த 06.03.2022-ந் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்ற நபரிடம் 15 பவுன் கொள்ளையடித்த சம்பந்தமாகவும், கடந்த 10.03.22ந் தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழுமாயி அம்மன் திருவிழாவின் போது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (வடக்கு) அறிவுரையின், காவல் உதவி ஆணையர் கண்டோன்மெண்ட் சரகம், அமர்வு நீதிமன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் எதிரிகள் தேடப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பாக பவித்ரன் (வயது 24) மற்றும் வெங்கடேசன் (வயது 57) ஆகியோரை கைது செய்தும் அவர்களை விசாரணை செய்ததில் திருச்சி மாநகர் பகுதியின் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டும் அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளில் எதிரிகள் கொள்ளையடித்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 19 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் மேற்படி எதிரிகள் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி கொள்ளை வழக்குகளில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு. சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து. பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைளை மீட்டு சிறப்பாக பணியாற்றிய சம்பந்தபட்ட காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆவிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO