அதிமுக ஆட்சியின் பல திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைப்பது போல முத்தரையர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்தார் - அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

அதிமுக ஆட்சியின் பல திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைப்பது போல முத்தரையர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்தார் - திருச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ரகுபதி, வளர்மதி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.முத்தரையர் சமுதாய மக்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருவது அதிமுக மட்டும் தான். எம்ஜிஆர் காலத்தில் அவர் அமைச்சரவையில் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தர்வருக்கு அமைச்சர் பதவி வழங்கினார். அப்போது நடந்த முத்தரையர் மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருச்சியில் ஒத்தக்கடையில் முத்தரையர் சிலை வைக்கப்பட்டு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
இங்கு சிலை வைக்கப்பட்டதன் மூலம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இருந்தது. அதன் பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுத்தார். பொதுவாக அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பல திட்டங்களை, பணிகளை ஸ்டாலின் திறந்து வைப்பது வழக்கம்.
அதுபோல முத்தரையர் மணிமண்டபத்தையும் அவர் திறந்து வைத்தார். முத்தரையர் சமுதாயத்திற்கு பெருமையை தேடி கொடுத்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆவார்கள்.அதிமுக ஆட்சிக்கு வரும்போது முத்தரையர் சமுதாயத்திற்கு பெருமையை தேடி கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision