பெல் நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்த தேசிய பாதுகாப்பு படை - அச்சமடைந்த ஊழியர்கள்

பெல் நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்த தேசிய பாதுகாப்பு படை - அச்சமடைந்த ஊழியர்கள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் பெல் நிறுவனத்தில் நுழைந்தால் எப்படி நிறுவனத்தை பாதுகாப்பது? தொழிலாளர்களை மீட்பது? என்பது குறித்து நேற்று (28.03.2023) இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை பெல் நிறுவன வளாகத்தில் உள்ள

நிர்வாக கட்டிடம் எண் 24 மற்றும் கட்டிடம் எண் 214 பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை மேஜர் டெப்டி கமாண்டர் திவாகர் தலைமையில் 120 படைவீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படையைச் டெப்டி கமாண்டர் பொன் ராஜ்குமார் தலைமையில் 40 வீரர்களும் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். 

ஒத்திகையின் போது திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், பெல் நிறுவன காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கமலவேணி ஆகியோர் உடன் இருந்தனர். கமாண்டோ படையினரின் திடீர் ஒத்திகையால் இரவு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு தெரியாததால் தொழிலாளர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும்  இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn