வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து  சிறுமி பலி - திருச்சியில் பரிதாபம்!!

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து  சிறுமி பலி - திருச்சியில் பரிதாபம்!!

Advertisement

திருச்சி ஏர்போர்ட் ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகே காலி மனையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. 

Advertisement

அந்த பகுதியில் நேற்று மாலை இவரது மகள் பாண்டி ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்த போது தவறி சுமார் 4 அடி ஆழத்தில் உள்ள மழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்துள்ளார்.

Advertisement

இதனை அறியாத குடும்பத்தினர் பாண்டிஸ்ரீயை தேடியபோது குழிக்குள் கிடந்ததை அறிந்து உடனடியாக மீட்டு அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.