திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு செம டோஸ் விட்ட ஆட்சியர்
திருச்சி மாநகராட்சி உட்பட்ட நான்கு கோட்ட பகுதிகளில் இன்று கோவிட் தடுப்பூசி போடப்படும் என காலை தான் அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடப்படும் முதல் நாளே மாவட்டத்தில் எங்கெங்கே என அறிவித்து விடுகின்றனர்.மாநகராட்சி நிர்வாகம் தடுப்பூசி போடும் இடங்களை பொதுமக்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிப்பதே இல்லை. இந்த நிலையில் இன்று காலை நான்கு கோட்டங்களில் உட்பட்ட பள்ளிகளில் கோவிட் தடுப்பூசி பொதுமக்கள் செலுத்திகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன் பிறகு பொதுமக்கள் அதிகமானோர் நான்கு கோட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர். பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட சேவாசங்கம் பள்ளியில் அதிகமானோர் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் .ஒருகட்டத்தில் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கதவை இழுத்து மூடினர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு அப்பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்தார். மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஏற்பாடும் செய்யாமல் உள்ளே மருத்துவர்களின் செவிலியர் வைத்து தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளனர் .மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி அதிகாரி ஒருவரை செம டோஸ் விட்டு சென்றுள்ளார் .
எந்தவிதமான ஏற்பாடுகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தராமல் இருப்பதை தொடர்ந்து கடிந்து கொண்டார். அதன் பிறகு அந்த மாநகராட்சி அதிகாரி மருத்துவ பணியாளர்களிடம் கோபமாக பேசியிருக்கிறார்.
மருத்துவ துறை பணியாளர்கள் தங்களிடம் மாநகராட்சி அதிகாரி நடந்து கொண்டது என்ன நியாயம் என்ற கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருவதும் அறிவிப்பும் செய்வதில்லை என்பது இன்று வெளிப்பட்டுவிட்டது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW