அமைச்சர் நேருக்கு ஒருவர் செருப்பு எடுத்து கொடுக்கும் வீடியோவால் சர்ச்சை!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் மத போதகர் விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது சர்ச்சை கிளம்பிய நிலையில், திருவெற்றியூர் திமுக அமைச்சருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அரசு பள்ளி மாணவிகள் வணங்கி பாராட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு நிர்வாகி ஒருவர் செருப்பு மாட்டி விடுகிற காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அமைச்சர் துரைமுருகன் ரஜினி பஞ்சாயத்தைத் தீர்க்கவே திமுக தலைமை பதறிப் போய், ரஜினியிடம் உடனடியாக வருத்தம் தெரிவிக்க சொல்லி இருந்த நிலையில், தேர்தல் வரைக்கும் இன்னும் ஒரு 2 வருஷம் எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாதீங்க என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
கடந்த ஆட்சியில அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தன் காலில் இருந்த செருப்பை சிறுவனை கழற்ற சொன்னது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது திமுக மூத்த அமைச்சர் கே.என். நேருவுக்கு நிர்வாகி ஒருவர் செருப்பை எடுத்து மாட்டி விடுவது கடும் சர்ச்சையையும், கண்டனங்களையும் அமைச்சர் தன் செருப்பை கூட போட மாட்டாரோ? எனவும், ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சது செருப்ப மாட்டி விடத்தானா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision