கோ - அபிஷேகபுரம் கோட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா - 67 தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசனை கூட்டம்

கோ - அபிஷேகபுரம் கோட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா - 67 தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட 67 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்

1.கொரோனா நோயாளிகளின் உடன் வருபவர்களை மருத்துவமனைகளின் உள்ளே அனுமதிப்பதில்லை

2.கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு பரிந்துரைப்தற்கு பதிலாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தல்

3.மருத்துவமனைகளில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வாங்குபவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை 

அவற்றை அனைத்து மருத்துவ மனைகளும் கடைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC