"புரோட்டாவுக்கு நோ - முருங்கைக்கீரை சாப்பிடுங்கள்" - திருச்சி காவலர்களுக்கு ஐஜி அறிவுரை!!
திருச்சியில் காவலர்களுடன் களத்தில் இறங்கி இன்று யோகசனம் செய்தார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம்.
Advertisement
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது. இதில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் கலந்துகொண்டு யோகாசனங்களை நேரடியாக செய்து காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தி அசத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணிபுரியும் 122 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆளிநர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பயிற்சியில் தற்காப்பு கலை பயிற்சி, ஜூடோ, கராத்தே மனவலிமைக்கு யோகாசனம் பயிற்சியும் அளிக்கபட்டது.
Advertisement
அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் யோகாசனங்களை நேரடியாக அவரே செய்து காண்பித்தார். முக்கியமாக மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்தார். கூடுதலாக உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். பயிற்சியில் ஈடுபட்ட காவலர்கள் உள்ளிட்ட அவரின் யோகா, உடற்பயிற்சிகள் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் பேசிய அவர் காவலர்கள் முக்கியமாக கீரை அதிலும் முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என பேசினார். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மைதா புரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் . சுமார் இரண்டு மணி நேரம் நடந்த தற்காப்பு பயிற்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயாவும் கலந்துகொண்டார்.