புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம்!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம்!!

புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமென டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 19 நாளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட தொடங்கினர்.

Advertisement

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர்.

Advertisement

மேலும் போராட்டத்தின்போது கஞ்சித்தொட்டி திறக்கவும் முயற்சித்தனர். ஆனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டதோடு தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை.

தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போது அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.