வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம்!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம்!!

திருச்சி அண்ணாசிலை அருகில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி தமிழக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பாக இன்று புதன்கிழமை திருச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் சார்பாக 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் தலைவர் காவிரி தனபாலன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO