வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 11-ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 11-ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு!!

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 22 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்,

Advertisement

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் பிரதமர் பேசாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.....

கனடா பிரதமர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார்.அவரை கண்டிக்க பிரதமர் முயற்சிக்கிறார் ஆனால் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கவில்லை.

கோரிக்கை ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் ஆனால் போராடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேளாண் விவசாய சட்டம் தமிழ்நாட்டிற்கு தான் முதன்மையாக எதிரானதாக உள்ளது.இந்த சட்டத்தால் மற்ற மாநிலங்களில் சந்தை தான் பாதிக்கப்படும் ஆனால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த விவசாயமும் இயற்கை வளங்களும் பாதிக்கப்படும்...

Advertisement

பாராளுமன்றத்தில் வேளாண் சட்டத்தை அ.தி.மு.கஆதரித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம்,இது ஜெயலலிதா வின் கொள்கைக்கு எதிரானது.எனவே தமிழக அரசு அந்த சட்டத்திற்கான ஆதரவை திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும். பிரதமரை சந்தித்து இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். இலையென்றால் தமிழக மக்கள் தமிழக முதலமைச்சரை மன்னிக்க மாட்டார்கள்.

இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி. டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களும்,இந்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளும் பங்கேற்கும் என கூறினார்.