திருச்சியில் வீட்டில் கொள்ளையடித்த நபரை 24மணி நேரத்தில் பிடித்த போலீசார் - எஸ்பி பாராட்டு

திருச்சியில் வீட்டில் கொள்ளையடித்த நபரை 24மணி நேரத்தில் பிடித்த போலீசார் - எஸ்பி பாராட்டு

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகர், 12 வது கிராஸில் வசித்து வரும் ரவிசந்திரன் (லேட்), மனைவி உமாமகேஸ்வரி, என்பவர் கடந்த 14.02.2022-ம் தேதி காலை 09.15 மணிக்கு சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை அலுவலகத்தில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை 07.15 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் மறைவாக வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொழுசுகள், (மொத்த மதிப்பு 1,80,000/-) கொள்ளை போனது.

15.02.2022ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண் 60/2022 u/s 454,380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தலைமை காவலர் 733 ஹரிஹரன், தலைமை காவலர்137 அருண்மொழிவர்மன், தலைமை காவலர் 855,  இன்பமணி தலைமை காவலர் 424, விஜயகுமார், முதல் நிலை காவலர் 1102 நல்லேந்திரன், முதல் நிலை காவலர் 348,  ராஜேஸ் முதல் நிலை காவலர் 1345 திரு.குணா, ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவ்வழக்கின் எதிரியான ஆன்ட்ரூஸ் , புதுத்தெரு, செம்பட்டு, ஏர்போட், பகுதியை சேர்ந்த எதிரியை இன்று காலை திருவெறும்பூர் பேரூந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான நின்று இருந்தவரை கைது செய்து எதிரியிடமிருந்து வழக்கின் கொள்ளையடிக்கபட்டவைகளை கைப்பற்றப்பட்டு எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு பதிவாகி 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn