சூரியனை உதிக்க விடமாட்டோம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருச்சியில் ஆவேச பேச்சு!!

சூரியனை உதிக்க விடமாட்டோம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  திருச்சியில் ஆவேச பேச்சு!!

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வருகை தந்தார். பின்னர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கு கரும்பு, அரிசி, பருப்பு, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். 

Advertisement

பின்னர் உரையாற்றிய விஜயபிரபாகரன்... மாற்றம் வர வேண்டும் மாற்றத்தை நீங்கள் தான் கொண்டு வர வேண்டும். 2021ல் சூரியனுக்கு வழி விடக்கூடாது என வானம் மூடிக்கொண்டு சூரியனே வராமல் மழை மட்டும் பொழிந்து வருகிறது. சூரியனை உதிக்க விடமாட்டோம். மற்ற கட்சிகளுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்ள விரும்புவதாகவும், திமுக எங்கள் கட்சியில் இருந்த குப்பைகளை தற்போது சேகரித்து வைத்துள்ளனர். எங்கள் கட்சி தங்க காசுகள் மட்டுமே உள்ளது. மேலும் பேசுகையில்,... தமிழ் தமிழ் என பேசும் திமுக, இந்தி பேசும் பிரசாந்த் கிஷோர் வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். 

மக்களே சிந்தியுங்கள் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் என கூறிக் கொள்பவர்கள் முன்பு எதிர்க் கட்சி என்ற முறையில் அவர்கள் முன்பு அமர்ந்திருந்தது தேமுதிக தான். இந்த இரண்டு கட்சிகளுக்கும் சளைத்தவர்கள் அல்ல தேமுதிக என பேசினார்.

Advertisement