தடுப்பூசி மைய தகவலை முறையாக தெரிவிக்காத மாநகராட்சி நிர்வாகம் - குழப்பத்தில் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

தடுப்பூசி மைய தகவலை முறையாக தெரிவிக்காத மாநகராட்சி நிர்வாகம் - குழப்பத்தில் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி தற்போது ஓரளவு படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ,மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து தடுப்பூசி தான் கோவிட் தொற்றிலிருந்து  தங்களை காத்துக்கொள்ளும் பேராயுதம் என தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாநகராட்சி கடந்த ஒருவாரமாக 18 வயதில் இருந்து 44 வயதுக்குள் பட்டவர்களுக்கு திருச்சியில் ஒரு 5 மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப் போவதாக தகவல்கள் தெரிவிக்க துவங்கியது.ஆனால் அந்த அறிவிப்பில் முறையாக பொது மக்களுக்கு சென்றடையும் வகையில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முதல் நாள் துவங்கிய பொழுது பதினெட்டு வயது மேற்பட்டோருக்கு  44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்பொழுது 16 வகையான களத்தில் பணியாற்றக்கூடிய அவர்களுக்கு முன்னுரிமை என அறிவிப்பு வெளியிடப்பட்டது .திருச்சி மாநகராட்சி அடுத்த நாள் எந்தெந்த மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப் படுகிறது என்பதை தெளிவாக அறிவிப்பதை இல்லை .

இரவு 12 மணிக்கு மேல் சமூக வலைதளங்களில் அறிவிக்கிறது .இதனை முன்னின்று பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் தடுப்பூசி மையங்களில் எவை என்பதை மருத்துவர் ஒருவர் அதற்காக தானே முன்வந்து இதற்கான இடங்களை தகவல் தந்தார்.  மாநகராட்சி தொடர்ந்து  மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்களும் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் .18 வயதில் இருந்து 44 வயது உள்ளவர்களுக்கு எந்தந்த மையங்களில் தடுப்பூசிகள் உள்ளது என்பதே முறையான அறிவிப்பு வெளியாகாததால் பொதுமக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர் .மேலும் 44 வயதுக்குமேல் 65 வயது உள்ளவர்கள் தடுப்பூசி எங்கே போடுவது என ஒவ்வொரு நாளும் மறைத்து வருகின்றது.

வயதான காலத்தில் அவர்கள் எந்த இடத்தில் தடுப்பூசி போடுவது என தெரியாமல் அலைகழிக்கபடுவதாக கூறிவருகின்றனர். மாநகராட்சி ஏன் இப்படி மெத்தன போக்குடன்  செயல்படுகிறது என பொதுமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து அறிவித்தும் ஆனால் மாநகராட்சி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி  மையங்கள் எனவ என முறையான அறிவிப்பு வெளியிடாமல் ஏன் இப்படி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற பதிவுகளுடம் தொடர்கிறது.

நாளை முதலாவது முறையான அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx