6 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து திருச்சிக்கு வந்த 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

6 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து திருச்சிக்கு வந்த 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

மகளிர் தினத்தை முன்னிட்டு டில்லியில் இருந்து 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் மகளிர் மேம்பாடு என்ற கருத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் (புல்லட்) பேரணியாக புறப்பட்டு பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா வழியாக 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.

அங்கிருந்து சென்னை செல்லும் வழியில் நேற்று மாலை திருச்சி வந்தனர். தொடர்ந்து, வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் பேரணி இன்று காலை திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பேரணியை திருச்சி திருவானைக்காவல் ஆண்டாள் கார்டனில் பொதுமக்கள உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேரணியில் வந்த வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பின்னர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் இப்பேரணியை கொடியைசத்து சென்னைக்கு வழி அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO