திருச்சியில் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

திருச்சியில் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கக் கூடிய மத்திய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்று பயணிகள் கூட்டத்தோடு வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பிட்ட அளவு தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய பேருந்து நிலையத்தில் அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலம் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 18 இடங்களிலும், மாநகரில் ஒரு இடங்களும் என மொத்தம் 19 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO