குருபெயர்ச்சி விழா - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குருபெயர்ச்சி விழா - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை மற்றும், சூரியனர் கோவில்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் (கும்பகோணம்) எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு (22.04.2023) முதல் (23.04.2023) வரை ஆலங்குடிக்கு கும்பகோணம், நீடாமங்கலம், மற்றும் மன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் தஞ்சாவூரிலிருந்து திட்டை கோவிலுக்கு குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவிலுக்கும் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn