திருச்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாநகரில் முக்கிய வீதிகளில் மழை நீர் சூழ்ந்தது குறிப்பாக கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர், லிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர் உடனடியாக மழைநீர் வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளூமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா செல்வம், முத்து செல்வம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision