5 சதவிகித ஜிஎஸ்டி வரி விலக்கு இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சி

5 சதவிகித ஜிஎஸ்டி வரி விலக்கு இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், கடல் சரக்கு இறக்குமதி மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக, ஐஜி எஸ்டிவிதிகளை மேற்கோள்காண்பித்து ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நடைமுறை இப்போது அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, இறக்குமதியாளர்கள் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் வழியாக, 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்தி பொருட்களை இறக்குமதி செய்து வந்தனர். இதற்கு எதிராக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுடன், மத் திய அரசின் இந்த அறிவிப்பு ஒத்துப்போவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதியாளர்கள், சரக்கு வழங்கல் மற்றும் போக்குவரத்து, காப்பீடு போன்ற சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை கலப்பு வினியோகம் மீது ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. ஆனால், இது ஜிஎஸ்டி சட்டத்தை மீறும் செயல் என்று தனியார் நிறுவனம் ஒன்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இப்போது, இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விலக்கு அறிவிப்பை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளதாக, இறக்குமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision