ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகளுக்கு முழு உடல் பரிசோதனை நிறைவு

ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகளுக்கு முழு உடல் பரிசோதனை நிறைவு

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தபோது  கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிஐ விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் தற்பொழுது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்  கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 நபர்களிடம் (ரவுடி) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.

இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர் ஆகிய 6 (ரவுடிகள்) நபர்களுக்கு நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய வந்தனர். மேலும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லெப்ட் செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை  செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று (19.11.2022) நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய ஐந்து பேருக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.  மேலும் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த முழு உடல் பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு இதன் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நாள் மற்றும் அனுமதியை  நீதிபதி 21 ஆம் தேதி அறிவிப்பார்.

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி சிறப்பு புலனாய் குழுவினர் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என தெரிய வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO