திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வாலிபால் போட்டி

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வாலிபால் போட்டி

நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருச்சி சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குழந்தைகள் தின விழா முன்னிட்டு திருச்சி சைல்டு லைன் அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களும், ரயில்வே பாதுகாப்பு படை விளையாட்டு வீரர்களும் இடையே வாலிபால் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார். கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் செல்போன் பயன்பாட்டிற்கு மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தவும், அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்சி தெப்பக்குளம் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கும், ஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.

மேலும் ஆபத்தை விளைவிக்க கூடிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் போட்டி போட்டு விளையாடிய விதத்தை பார்த்து மற்ற மாணவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியது.

இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞான சுசிகரன், ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் கிரண், சைல்ட் லயன் அமைப்பின் மைய இயக்குனர் கார்டுவின், இணை நிறுவன இயக்குனர் கோவிந்தராஜ், மைய நிறுவன இணை ஒருங்கிணைப்பாளர் முரளி, சுகுமார், சுப்பிரமணி, சைல்ட் லைன் இணை நிறுவனம் தேவை அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO