உலக ஈரநில நாள் திருச்சி வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி

உலக ஈரநில நாள் திருச்சி வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக ஈரநில நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹிபர் உயர்நிலைப்பள்ளியில் இன்று (27.01.2024) நடைபெற்றது.

இதில் 214 பள்ளி/ கல்லூரி மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/ மாணவியர்களுக்கு தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார், தமிழ்நாடு பசுமை இயக்கத்தை சேர்ந்த பசுமை தோழர் காட்வின் நிஜில், முதன்மை கல்வி அலுவலரின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், கோபிநாத் வனச் சரக அலுவலர், திருச்சி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியினை பாலசுப்ரமணியன் மற்றும் துளசிமலை வனவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் (02.02.2024) அன்று சிறுகனூர் அருகே திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் கோயில் ஏரியில் கல்லூரி மாணவ/ மாணவியர்,

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision