கிராமப்புற செவிலியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டு நடவடிக்கை குழு சார்ப்பில் மாவட்ட தலைநகரில், மாவட்ட ஆட்சியர் இடத்தில், தமிழ்நாடு தழுவிய பெருந்திரள் முறையீடு
1982 ஆம் ஆண்டு முதல் ஒரு நோக்குத்திட்டத்தை, பல்நோக்கு திட்டமாக அரசு செயல்படுத்திய போது, கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் ஒட்டு திண்ணை, ஒண்டு குடித்தனம், மாடுக்கொட்டில், மடப்பள்ளி, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில், சுடுகாடு, இடுகாட்டிற்கு அருகிலும் தனது ஊதியத்திலிருந்து வாடகை வழங்கி சிறப்பாக பணியாற்றியவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள்.
பிரசவ பணி, தாய் சேய் நலப்பணி, தடுப்பூசி பணிகள், ஆய்வு கூட்டங்கள், அறிக்கைகள், பதிவேடுகள் வழங்கப்படாத நிலையில் தனது ஊதியத்திலிருந்து வாங்கி பராமரித்தல், குடும்ப நலப்பணிகள், பெண்ணுலகம், கருக்கொலைகளைத்தடுத்தல், பள்ளிசிறார் நலன், மலேரியா, யானைக்கால் நோய், எலி காய்ச்சல், டெங்கு, சிக்குன்-குன்யா, பறவைக் காய்ச்சல், கோவிட்-19, அரசு, பொது சுகாதாரத்துறை அறிவிக்கும்
எல்லா நலவாழ்வு திட்டத்திலும் தங்களை குடும்பத்தோடு இணைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி, தமிழ்நாடு அரசு விருதுகளும், நற்சான்றுகளும் வாங்குவதற்கு, முக்கியமானவர்களில் முதன்யானவர்கள் கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள். முன்னாள் முதலமைச்சர்களின் டாக்டர் கலைஞர், ஜெ.ஜெயலலிதா பொசுகாதாத்துறையின் முதுகெலும்பு என்று பாராட்டைப் பெற்றவர்கள் கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள்.
கிராமப்புற செவிலியர்களின் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் :- காலியாக உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய்மை துணைசெவிலியர் பயிற்சி நிறைவு செய்தவர்களை பணியமர்த்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப பதியதாக உருவாக்கப்பட உள்ள துணை சுகாதார நிலையங்களில் MLHP, NURSE-களை பணியமர்த்தும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியரை பணி நியமனம் செய்ய வேண்டும்.
PICME-3.0 உள்ள குறைபாடுகள், இடர்பாடுகளை சரிசெய்யும் வரை கிராம, பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களை தரவுகளை உள்ளீடு செய்ய அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். குடும்ப விவரங்களை பதிவேட்டில் கணக்கெடுத்து பதிவு செய்ய கால அவகாசம் வழங்காமல் நாள்தோறும் Goole-ல் தரவுகளை உள்ளீடு செய்யச் சொல்வதை நிறுத்த வேண்டும்.
களப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சமுதாய சுகாதார செவிலியருக்கு கணினி வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியருக்கு பழுதடைந்த மடிக்கணினி மாற்றி தரமான புதிய மடிக்கணினியும், கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியருக்கு ஆன்ட்ராய்டு போன் வழங்க வேண்டும்.
கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார் அலுவலகங்களில் மேசை நாற்காலி, குடிநீர், கழிவறை, மின்விசிறி வசதிகளுளடன் தனி அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். கிராம சுகாதார செவிலியருக்கு எரிபொருளுடன் துணை சுகாதார நிலைய உடைமையாக இருசக்கர வாகனம் வழங்கவேண்டும். அறிக்கைகள் கொடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
திறனாய்வின் போது ஒருமையில் பேசுவது, பண்பாட்டு வித்தைகள் பயன்படுத்துவதை தடுத்திறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட கிராமப்புற செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision