திருச்சியின் அடையாளமாகும் கல்லூரிகள் - பகுதி 1
"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்று பாரதி எழுத காரணமாக இருந்த ஊர்களில் திருச்சி முக்கியமானது. ஓர் ஊரின் வளர்ச்சியில், வாழ்வில் கல்வி வளர்த்த கூடங்களும் வரலாறும் முக்கியம். கல்வி வளர்த்த பல பள்ளிகளும், கல்லூரிகளும் திருச்சியின் அடையாளங்களாய் ஒளிர்கின்றன.திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர் திருச்சி.
இன்று பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் சிறப்பாக இயங்குகின்றன. பழைய கல்லூரிகள் திருச்சிக்கு வந்த கதை சுவையானது. இன்று பலரும் தாங்கள் படித்த கல்லூரிகளோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது. எல்லா கல்லூரிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்கள் (ALUMNI) களைகட்டுகின்றன. நட்பு புதுப்பிக்கப்படுகிறது
திருச்சிக்கு வந்த முதல் கல்லூரி - பிஷப் ஹீபர் கல்லூரி இன்று 13500 மாணவர்கள் படிக்கும் கல்லூரியாக வளர்ந்துள்ள பிஷப் கல்லூரி, சுவார்ட்ஸ் பாதிரியாரால் 1762 ல் எஸ்.பி.சி.கே மிஷன் மூலம் ஒரு பள்ளியாகவே தொடங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இயங்கிய இப்பள்ளி, அடிக்கடிவந்த புயலால் திருச்சிக்கு மாற்றப்பட்டது. இதுவே பிறகு எஸ்.பி.ஜி பள்ளியாக மாறியது. 1826 ஆம் ஆண்டு வந்த பேராயர் ரெஜினால்டு ஹீபர் பள்ளியை வளர்த்தார். எதிர்பாராதவிதமாக நீதிமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் குளிக்கும் போது இறந்தார்.
இவரின் நினைவாய் பெரும் நிதி திரட்டப்பட்டு பள்ளி வளர்ந்து, 1864-ல் தெப்பக்குளத்துக்கு அருகில் இன்றுள்ள இடத்துக்கு மாறியது. வயலூர் சாலையில் இன்றுள்ள இடத்துக்கு 1968-ல் கல்லூரி வந்தது. புதிய கட்டடங்களின் எழில் மிகுந்த தோற்றத்தால் BEAUTY BISHOP ஆனது. 2001-ல் 5 STARS தகுதியை NAAC வழங்கியது. 2007ல் A+ தரத்துக்கு உயர்ந்தது. 2011ல் EXCELLENCE நிலையை UGC வழங்கியது.
இளங்கலை முதுகலைத் துறைகளில் பல்வேறு மாணவர்கள் சாதனை பிரிந்து வருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் கல்லூரி சிறந்து விளங்கி வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision